Saturday, March 28, 2009

தமிழ்ப் பேச்சு எங்கள் முச்சு- சுட்டிகள்


விஜய் டிவியில் தமிழ் கூறு நல்லுலகெல்லாம் பெருத்த வரவேற்பைப் பெற்ற "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" நிகழ்ச்சியின் நீட்சியாக அடுத்து "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு"- சுட்டிகள் இந்த வாரம் ஞாயிறு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.


கோவை,திருச்சி,மதுரை, நெல்லை,சேலம்,சென்னை போன்ற இடங்களில் நடந்த முதல் நிலைச் சுற்றில் தேர்வான எட்டு முதல் பதினைந்து வயதுக்குற்பட்ட மழலைகள் சென்னையில் நடைபெற்ற அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்ந்த்தேடுக்கப் பட்டனர்.


பேரா.சுப.வீர பாண்டியன்,பேரா.பர்வின் சுல்தானா ஆகியோர் சிறப்பு நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.கவிஞர்.சல்மா நடுவராக பங்கேற்றார்.


பல்வேறு தலைப்புகளில் சுட்டிகள் கருத்து மழை பொழிந்தனர். மிக அருமையாகவும்,,ஆற்றலுடனும் தங்களுக்கு கொடுக்கப் பட்ட தலைப்புகளில் ,கொடுக்கப் பட்ட நேரத்திற்குள் பேசினார்கள்

இனி ஒவ்வொரு வாரமும் தமிழ் முழக்கம் வீடு தோறும் கேட்கலாம் விஜய் டிவியில்..

No comments:

Post a Comment