ஏவிஎம் தயாரித்து சூர்யா-தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள அயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதுதான் இப்போது ஹாட் டாக் .தாங்கள் தயாரித்த ஒரு படத்தை வேறொரு நிறுவனத்துக்கு ஏவிஎம் விற்றிருப்பது இதுவே முதல்முறை.
காதலில் விழுந்தேன் தொடங்கி இப்போது ரிலீசாகியுள்ள வரை, சன் பிக்சர்ஸ் வெளியிட்ட எந்தப் படமும் அதன் நேரடித் தயாரிப்பல்ல. இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள், படப்பிடிப்பு முடிவுறும் தருவாயில், செய்த செலவுக்கு மேல் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு சன் பிக்சர்ஸுக்கு விற்று விட்டனர்.
இந்தப் படங்களில் பெரும்பாலானவற்றை அதன் தயாரிப்பாளர்கள் வழக்கமான முறையில் வெளியிட்டிருந்தால் அசல் கூட தேறியிருக்காது. ஆனால் சன் குழுமத்தின் அசத்தல் விளம்பரங்கள் வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு.
அந்த வரிசையில் இப்போது அயன் படத்தையும் சன் பிக்சர்ஸுக்கு மொத்தமாகக் கொடுத்துவிட்டது ஏவிஎம் நிறுவனம்.இந்தப் படத்துக்கு மிகப்பெரிய தொகையை சன் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்த டீல் சுமூகமாக முடிய முக்கியக் காரணமாக இருந்தவர் சக்ஸேனா.
இத்தனை படங்களை சன் பிக்சர்ஸ் பேனரில் வெளியிட்டாலும், இதன் முதல் நேரடித் தயாரிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் ..
Tuesday, March 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment